43- சென்னை புத்தகக் காட்சியில் இலக்கியச்சோலை

0

43- சென்னை புத்தகக் காட்சியில் இலக்கியச்சோலை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் நடத்தப்பட்ட 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். 750 அரங்குகள், பல்வேறு தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் மற்றும் 3 ஆயிரம் சதுரஅடியில் தொல்குடி தமிழர் நாகரிக வரலாற்றை பறைசாற்றும் கீழடி அரங்கு என பல்வேறு ஏற்பாடுகளுடன் களைகட்டியது புத்தகக் காட்சி. இந்த புத்தகக் காட்சியை 13 இலட்சம் பேர் பார்வையிட்டதாகவும், 60 இ லட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும் கூறியுள்ள பபாசி, இதன்மூலம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய புத்தாக்க சிந்தனைகளுடன் இயங்கி வரும் இலக்கியச் சோலை பதிப்பகமும் 22வது ஆண்டாக சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்றது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்த புத்தகம் அகித எண்ணிக்கையில் விற்பனையாகியது. ஹாதியாவின் என் கதை, ஸிஷிஷி அறிந்து கொள்வோம், யார் இந்த தேவதை? சங்பரிவார் நேற்று இன்று நாளை ஆகிய புத்தகங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

‘தமிழக அரசின் ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை புத்தக காட்சியில் இருந்து வெளியேற்றிய பபாசியின் செயல் கருத்துரிமையை பறிப்பதாக இருந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.