45 வது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு மற்றும் அதனை தொடரும் நிகழ்வுகள்

0

45 வது அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் நடந்து முடிந்து டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 279 இடங்களிலும், ஹில்லாரி கிளிண்டன் 228 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு கருத்துக்கணிப்புகள் ஹில்லாரி தான் அடுத்த பிரதமராவார் என்று கூறியிருந்தும் அத்தனையும் மீறி டிரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹில்லாரி கிளிண்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் ஹில்லாரியின் போட்டியாளரான ட்ரம்ப்பின் குற்றப்பட்டியலை ஒப்பிடும் போது அவை ஒன்றுமில்லாமல் போனது. தனது பிரச்சாரங்களில் இன வெறியை தனது அடையாளமாகவே கொண்டிருந்தார் ட்ரம்ப். அது போக அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தனர். அவர்களின் குற்றச்சாட்டை உறுதி செய்வது போலத்தான் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளும் இருந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது மகள் மிகவும் அழகானவள் என்றும் தனது மகளாக இல்லாதிருந்தால் அவருடன் டேட்டிங் செல்வேன் என்றும் ட்ரம்ப் கூறியது மக்களை முகம் சுளிக்கவைத்தது.

ட்ரம்ப் மேல் இன்னும் பல பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அவரை பெரும்பான்மை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த டெமோக்ராட் கட்சியின் மீதான மக்களின் கோபம் மற்றும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் கொடுத்த நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகள். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு, மெக்சிகோ அமெரிக்கா இடையே பெருஞ்சுவர், முஸ்லிம்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றுவது என்று சிறிது நம்பிக்கையும் நிறையவே இன வெறியையும் ட்ரம்ப் வாக்களித்தார். அமெரிக்க மக்களும் தங்களின் அமெரிக்க திமிருக்கு அவை தீனி போடுவதால் அதனை அப்படியே மனதார ஏற்றுகொண்டனர் போலும்.

தற்போது டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தேடுக்கப்பட்டாலும் 2017 ஜனவரி மாதம் வரை அதிகாரபூர்வமாக அவர் அமெரிக்க ஜனாதிபதியாக மாட்டார். இப்படி இருந்தும் மக்கள் அஞ்சிய பல விஷயங்கள் அமெரிக்காவில் நிகழத் தொடங்கிவிட்டது.

இஸ்ரேலின் முக்கிய அமைச்சர் ஒருவர் இனி ஃபலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை என்று அறிவித்துள்ளார். இஸ்ரேலின் வலது சாரி கூட்டமைப்பின் முக்கியமானவரும் இஸ்ரேலின் கல்வி அமைச்சரூமான நஃப்டி பென்னட் என்பவர், “டிரம்பின் வெற்றி ஃபலஸ்தீன் நாடு என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்ய இஸ்ரேலுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்கள் அமெரிக்கர்களால் தாக்கப்படுவதும் மிரட்டப்படுவதும் அதிகமாகியுள்ளது. டிரம்ப் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதற்கு மறுதினமே இந்தியர் ஒருவர் அமெரிக்கர்களால் மிரட்டப்பட்டுள்ளார். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வெளியே செல்ல அச்சமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். KKK என்ற இனவெறி கும்பல் ட்ரம்ப்பின் வெற்றியை கொண்டாடியுள்ளது. இந்த இனவெறி குழுவின் முன்னாள் தலைவனான டேவிட் டியுக் என்பவன் டிரம்ப் வெற்றி பெற்ற இரவு தன் வாழ்வில் மிக மகிழ்ச்சியான இரவு என்று கூறியுள்ளான். இன்னும் டிரம்ப் வெற்றி பெற தங்கள் குழுவினர் பாடுபட்டனர் என்றும் அவன் கூறியுள்ளான். டிரம்பின் வெற்றிக்கு இங்கிலாந்தின் இன வெறி குழுக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு வன்முறைகளுக்கும் முஸ்லிம் எதிர்ப்புக்கும் பெயர் போன ENGLISH DEFENSE LEAGUE (EDL), BRITIAN FIRST, BRITISH NATIONAL PARTY ஆகியவை டிரம்பின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்தும் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தும் உள்ளனர். மேலும் ஐரோப்பாவின் ஃபிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் வலது சாரிகளும் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளனர். எல்லாவற்றிகும் மேலாக இந்தியாவின் இந்துத்வவாதிகள் டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பூஜை நடத்தியதை நாம் நன்கறிவோம். ஆக உலகின் அனைத்து வலது சாரி வன்முறை கும்பலின் ஆதரவு பெற்ற அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் உள்ளார்.

டிரம்பின் வெற்றி சில அமெரிக்கர்களை கோபமுரவும் செய்துள்ளது. டிரம்பின் வெற்றியால் கோபமுற்ற அமெரிக்கர்கள் சிலர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஒரேகொண், வாசிங்டன் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் போராட்டத்தில் குதிதுள்ளனர். கலிஃபோர்னியா மக்கள் கலிஃபோர்னியா மாகாணத்தை அமெரிக்கவில் இருந்து பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னர் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

டிரம்பின் வெற்றியை அடுத்து சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பொருளாதார கொள்கைகளினால் அமெரிக்க டாலர் மதிப்பிழக்கக் கூடும் என்று அச்சமுற்ற மக்கள் டாலருக்கு பதிலாக தங்கத்தை சேர்க்கத் தொடங்கியுள்ளனர். ஆயுத நிறுவனங்களின் பங்குகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான BAE Systems நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

டிரம்ப் அமெரிக்க அதிபரானதையும் டிரம்பின் கொள்கைகளையும் பிடிக்காத அமெரிக்க மக்கள் பலர் கனடாவில் குடியேற முயற்சித்து வருகின்றனர். அதிகப்படியான மக்கள் கனாடாவில் குடியேற விண்ணப்பிக்க முயற்சித்ததால் கனாடா நாட்டு குடியேற்ற இணையதளம் முடங்கியது.

ஒட்டுமொத்தமாக டிரம்பின் வெற்றி ஒரு பேரழிவை எதிர்நோக்கியுள்ளது போன்று பலராலும் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் டிரம்ப் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று பல கருத்து கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்தாலும் அதனை மீறி டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் ஜனாதிபதி ஆனதை அடுத்து இத்தகைய சூழ்நிலைகள் உருவாகியிருக்கும் வேலையில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Comments are closed.