4880 கோடிகளை விளம்பரத்திற்காக செலவளித்த பாஜக அரசு

0

4880 கோடிகளை விளம்பரத்திற்காக செலவளித்த பாஜக அரசு

கடந்த 2014-15 முதல் மத்திய பாஜக அரசு அச்சு, மின்னணு மற்றும் இதர ஊடகங்களில் வெளியிட்ட விளம்பரங்களுக்காக 4880 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது என்று ராஜிய சபாவில் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இந்த செலவுகள் குறித்து விளக்கமாக விவரித்த ராஜ்யவர்தன் 2014-2015 காலகட்டத்தில் 979.78 கோடிகளும், 2015-16 காலகட்டத்தில் 1160.16 கோடிகளும், 2016-17 காலகட்டத்தில் 1264.26 கோடிகளும், 2017-18 காலகட்டத்தில் 1313.57 கோடிகளும் விளம்பரத்திற்காக அரசு செலவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இன்னும் 2018-19 வரையிலான காலகட்டதிற்கு இதுவரை 162.83 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் 2128.33 கோடி ரூபாய்கள் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு செலவு செய்திருக்க 2131.57 கோடி ரூபாய்கள் ஒலி மற்றும் ஒளி வடிவ விளம்பரங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இத்துடன் 620.70 கோடி ரூபாய் பதாகை, சுவரொட்டி போன்ற விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.