5 ஆண்டில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு

0

சிறுபான்மையின மாணவர்களை முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது, “ஆண்டுக்கு 1 கோடி சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு பயிற்சி தரப்படும். எனவே இதன்மூலம் அவர்கள் மதப்பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு பொதுக்கல்வித்திட்ட பாடங்களை கற்பிக்க வழி பிறக்கும். இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்கிவிடும்” என்றார்.

Comments are closed.