5 ஆண்டுகளில் ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0

கடந்த ஐந்து ஆண்டில் ஹஜ் செல்வோருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை 63,980 வரை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர் “கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கான ஒதுக்கீடு 1,36,020. அந்த எண்ணிக்கை தற்போது 2,00,000 அதிகரித்துள்ளது. அதாவது 63,980 பேர் ஹஜ் செல்வதற்கு அதிகரித்துள்ளனர்.

இந்தமுறை 2,00,000 ஹஜ் மேற்கொள்ள எந்தவித மானியமும் இல்லாமல் தங்களின் புனிதப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இது தான் இந்திய வரலாற்றில் அதிக எண்ணிக்கை.

மொத்த எண்ணிக்கையில் 1,40,000 பயணிகள் இந்திய ஹஜ் கமிட்டியின் ஏற்பாட்டின் பேரிலும், 60,000 யாத்ரிகர்கள் தனியார் ஏஜென்சிகளின் மூலமும் ஹஜ் பயணம் செல்கிறார்கள்” என்றார்.

Comments are closed.