50% காவல்நிலைய மரணங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை

0

2001 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை மொத்தம் நிகழ்ந்த 1275 காவல்நிலைய மரணங்களில் வெறும் 50% காவல்நிலைய மரணங்களில் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று National Crime Records Bureau (NCRB) தெரிவிக்கின்றது.

சிறை, மற்றும் காவல்நிலைய மரணங்களாக தேசிய மனித உரிமை கழகம் அறிவித்துள்ள எண்ணிக்கை இதனைக் காட்டிலும் கூடுதல் எனத் தெரிகிறது. அதன் எண்ணிக்கைப்படி 12727 பேர் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை காவல்நிலையங்களில் மரணித்துள்ளனர்.

2013 க்கு பின்னாரான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறன என்று உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த கால அட்டவணையில் குறைந்தபட்ச மரணங்கள் 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. அதிகபட்சமாக 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. 2005 இல் மொத்தம் 128 மரணங்களும் 2010 இல் மொத்தம் 70 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருட சராசரியாக 98 பேர் காவல்நிலையத்தில் மரணிக்கின்றனர்.

Asian Centre for Human Rights (ACHR) அமைப்பின் Torture in India 2011 அறிக்கைப் படி இந்த தகவல்களில் ராணுவ காவலில் மரணித்தவர்கள் பற்றிய எண்ணிக்கை விபரம் இல்லாததால் இது உண்மையான எண்ணிக்கையை இல்லை என்று தெரியவருகிறது.

காவல் நிலைய மரணங்களில் மஹாராஷ்டிரா(306), ஆந்திரா(210) மற்றும் குஜராத்(152) மாநிலங்களில் அதிகப்படியான காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பீகாரில் இந்த கால இடைவெளியில் வெறும் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

ஹரியானா, மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அனைத்து காவல்நிலைய மரணங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மஹாராஷ்டிராவில் வெறும் 11.4% மரணங்களுக்கு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

ஒவ்வொரு 100 மரணங்களுக்கு வெறும் 2 காவல்துறையினர்கள் தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2001 இல் இருந்து 2013 வரை நிகழ்த்தப்பட்ட காவல்துறை மரணங்களுக்கு மொத்தம் 26 காவலர்கள் தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 100 மரணங்களுக்கு 34 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட காவலர்களில் 12% தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் மொத்தம் 14% காவலர்கள் மீது தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எவருமே தண்டிக்கப்படவில்லை. உத்திர பிரதேசத்தில் 71 காவலர்கள் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 17 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.