500 , 1000 ரூபாய் தடை: ஜன் தன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 21000 கோடி ரூபாய்கள்.

0

பா.ஜ.க அரசு புழக்கத்தில் இருந்து வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க அறிமுகப்படுத்திய ஜன் தன் வங்கிக் கணக்குகளில் 21000 கோடி ரூபாய்க்கள் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வங்கிக் கணக்கு என்கிற அடிப்படையில் 24 கோடி வங்கிக் கணக்குகள் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டதும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பிறர் வங்கிக் கணக்குகளில் கருப்பு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவுபவர்கள் மீது வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபப்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிறு சேமிப்பு திட்டங்களிலும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை செலுத்த அரசு தடை விதித்திருந்தது. இதன் அடிப்படையில்  Public Provident Fund (PPF), அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டம், National Savings Certificates (NSC) தேசிய சேமிப்பு சான்றிதல், Senior Citizen Savings Scheme (SCSS) முதியோர் சேவை திட்டம், போன்ற திட்டங்களிலும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய்களை செலுத்தவும் அரசு தடை விதித்துள்ளது..

Comments are closed.