57% நியு யார்க் டைம்ஸ் நாளிதழின் தலைப்புக்கள் முஸ்லிம்களை மோசமாக சித்தரிகின்றன: ஆய்வு

0

டொரோண்டோவை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் தலைப்புக்களில் 57% முஸ்லிம்களை மோசமாக சித்தரிகின்றன என்று தெரிய வந்துள்ளது.

“Are Muslims collectively responsible” என்ற தலைப்பிட்ட இந்த ஆய்வில் தி நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் இஸ்லாம், முஸ்லிம் போன்ற வார்த்தைகளுடன் கேன்சர், யாங்கீஸ், மற்றும் ரிபுப்ளிக்கன் போன்ற வார்த்தைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் இந்த வார்த்தைகள் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்று ஆராயப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்புடைய தலைப்புகளில் 57% எதிர்மறை கருத்துக்கள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது என்றும் 8% தலைப்புக்கள் முஸ்லிம்கள் குறித்த நேர்மறை கருத்துக்கள் அடங்கியதாக உள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்ட மற்ற வார்த்தைகளில் இஸ்லாம் / முஸ்லிம் என்ற வார்த்தைகள் தான் அதிகளவில் எதிர்மறை கருத்துக்கள் கொண்ட தலைப்புகளாக உள்ளன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இஸ்லாம் குறித்த விவாதங்களில் பயன்படுத்தப்படும் இத்தகைய வார்த்தைகள் இஸ்லாம் மீதான தவறான  புரிதலை ஏற்படுத்தும் என்றும் இது மக்களிடையே மோசமான தாக்கத்தை உண்டு பண்ணும் எனவும் இறுதியல் அது தவறான கொள்கைகளை உருவாக்கும் எனவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.