70% ஃபலஸ்தீன ஆதரவு பதிவுகளை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர் வலைத்தளங்கள்

0

இஸ்ரேலின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சிபி ஹோடவ்ளி சமூக வலைதளங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகளை நீக்குவது தொடர்பாக பிரபல சமூக வலைதளங்களின் அதிகாரிகளை சந்தித்து சென்ற வருடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். (பார்க்க செய்தி)

தற்பொழுது இஸ்ரேலின் அழுத்தத்துக்கு கட்டுப்பட்டு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்கள் 70% ஃபலஸ்தீன ஆதரவு (இஸ்ரேலிய எதிர்ப்பு) பதிவுகளை நீக்கியுள்ளனர். இஸ்ரேலின் எடியோத் அஹ்ரோனோத் என்ற பத்திரிகைக்கு இதனை இஸ்ரேலின் நீதித்துறை அமைச்சர் ஐலேட் ஷகெட் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்கள் நமது வேண்டுகோளில் ஏறத்தாள 70% இணை நிறைவேற்றியதால் நாம் நமது இலக்கை (இஸ்ரேலிய எதிர்ப்பு பதிவுகளை நீக்குவது) வெற்றிகரமாக அடைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டக்கூடிய பதிவுகளை தான் நீக்கக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பதிவுகள் குறைக்கப்படுவதால் இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்களும் குறைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் சமூக வலைதளங்களின் இந்த இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு தங்களுக்கு கவலையளிப்பதாக ஃபலஸ்தீன ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் சர்வதேச அளவில் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இஸ்ரேல் கொண்டு வருவதும் தங்கள் ஆதரவு செய்திகளை வெளியிடச் செய்வதும் ஒன்றும் இஸ்ரேலுக்கு புதிதல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபலஸ்தீனில் அன்றாடம் நடக்கும் இஸ்ரேலின் அத்துமீறல்களை எந்த ஒரு ஊடகமும் வெளியிடாத நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் ஃபலஸ்தீன மக்கள் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இது இஸ்ரேலின் உண்மை முகத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. வெறும்ஃ பேஸ்புக் பதிவுகளுக்காக இதுவரை 28 ஃபாலஸ்தீன பெண்களை கைது இஸ்ரேல் கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (பார்க்க செய்தி).   தற்பொழுது இத்தகைய பதிவுகளை அழிப்பது மூலம் தங்களின் அடக்குமுறைகள் வெளியுலகத்திற்கு தெரியாமல் காத்துக் கொள்ள நினைக்கிறது இஸ்ரேல்.

Comments are closed.