75% பள்ளி இருந்து வெளியான குழந்தைகள் தலித், ஆதிவாசி மற்றும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்

0

குழந்தைகளின் கல்வி நிலை தொடர்பாக ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கான பதில் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளன.

CPI கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ் இந்தியாவில் கல்வி தொடர்பாக கேட்ட ஒரு கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி பதிலளிக்கையில் 6 இல் இருந்து 13 வயது வரம்புக்குட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியேறியவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட தலித், ஆதிவாசி, மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது

இது குறித்த விரிவான அறிக்கையில் பள்ளியில் இருந்து வெளியான சிறுவர்களில் மேற்கூறிய சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்ற சமூக மக்களை விட மூன்று மடங்கு .அதிகமாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த மொத்த 60 லட்ச குழந்தைகளில் 32.4% பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், 25.7% குழந்தைகள் முஸ்லிம்கள், 16.6% ஆதிவாசிகள்

2014 இல் IMRB என்ற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் பள்ளியில் இருந்து வெளியாகிய குழந்தைகளில் அதிகமானவர்கள் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் என்று அறிவித்திருந்தது.

இந்தியாவில் அனைவருக்கும் கல்வி போன்ற கல்விக்காக பல திட்டங்கள் இருந்தாலும் குழந்தைகளின் கல்வி நிலை இவ்வாறு இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

Comments are closed.