78 வயது ஹாஃபிழ் ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் அமெரிக்க சிறையில் மரணம்

0

1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக வர்த்தக மைய தாக்குதலில் தொடர்புடையவர் என்று  போலியாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அரசால் சிறையில் அடைக்கப்பட்ட ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் அமெரிக்க சிறையில் உயிரிழந்தார். இவருக்கு வயது 78.

தான் 10 மாத குழந்தையாக இருந்த போது போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் தனது பார்வையை இழந்த ஷேக் ஓமர் தனது 11 வயதில் குரான் முழுவதையும் மனனம் செய்தவர். இஸ்லாமிய கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் கைரோ பல்கலைகழகத்திலும் பின்னர் எகிப்தின் புகழ்பெற்ற அல் அஸ்கர் பல்கலைகழகத்திலும் பயின்றவர். இவர் நியு யார்க் நகர பள்ளிவாசல்கள் பலவற்றில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு ஆற்றியுள்ளார். 1996 ஆம் ஆண்டு இவருக்கும் 1993 ஆம் ஆண்டு உலக  வர்தக மைய தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக கூறி இவரது குற்றங்கள் நிரூபிக்கப் படாவிட்டாலும் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பாக பல மாதங்கள் நடைபெற்ற வழக்கு இறுதியில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் இவரது உணமையான குற்றமாக கருதப்படுவது, அப்போதைய எகிப்து சர்வாதிகாரி அன்வர் சதாத் ஜியோனிசத்திடம் சரணடைந்ததை எதிர்த்து ஃபத்வா கொடுத்தது தானென்று கூறப்படுகிறது. அன்வர் சதாத்தின் சர்வாதிகாரத் தனத்தை கடுமையாக எதிர்த்த இவர் ஜியோனிச இஸ்ரேலுடன் எகிப்து செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வன்மையாக கண்டித்தார். மேலும் ஷேக் ஓமர் எகிப்தில் நிலவில் இருந்த ஊழல் நிறைந்த அரசு கவிழ இஸ்லாமிய புரட்சி வர வேண்டும் என்றும் இஸ்லாமிய சமூக அரசியல் கட்டமைப்பு கொண்ட சமூகத்தை அங்கு உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இத்தோடு முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க ஜியோனிச சதிகளை கடுமையா எதிர்த்தவர் ஷேக் ஓமர்.

இவர் சிறையில் இருந்த காலங்களில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவரை யாரெண்டும் காண வரும் போதெல்லாம் அவர் அவனாப்படுத்தும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதனாலையே அவர் பார்வையாளர்களை பின்நாட்களில் தவிர்த்துவிட்டார்.

இதைய நோயாளியான அவர் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் பிப்ரவரி 18 ஆம் தேதி பட்னர் ஃபெடரல் மருத்துவ மையத்தில் வைத்து உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மகன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இருந்து கைரோவில் உள்ள தங்களது குடும்பத்தாருக்கு தனது தந்தை இறந்துவிட்டதாக அழைப்பு வந்தது என்று தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

சிறையில் இருந்து இவர் வெளிவர வாய்ப்பே இல்லாத போதும் இவர் உயிருடன் உள்ளதையே எகிப்து மற்றும் ஜியோனிச சர்வாதிகார சக்திகள் அச்சுறுத்தலாக எண்ணின. தற்போது இவரது மறைவு சிறை கம்பிகளுக்கு பின்னிருந்தும் மக்களை ஒன்றுபடுத்தி சக்தி படுத்தும் ஒரு சக்திவாய்ந்த குரலின் மறைவாகவே கருதப்படுகிறது.

Comments are closed.