0

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து பிரக்யா சிங்கை விடுவிக்க ஆட்சேபனை இல்லை: NIA

2008  ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங்கை அவ்வழக்கில் இருந்து விடுவிக்க தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் NIA தெரிவித்துள்ளது.

பிரக்யா சிங் தாகூர், தனக்கு பாம்பே உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பிணை வழங்கி உத்தரவிட்டதும் தன்னை இந்த வழக்கில் இருந்து நீக்குமாறு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

தேசிய புலனாய்வுத்துறை பிரக்யா சிங்கை இவ்வழக்கில் குற்றமற்றவர் என்று தனது கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறியதை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எட்டு பக்கங்கள் கொண்ட இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் இவ்வழக்கில் பிரக்யா சிங்கை குற்றவாளியென நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் மீது முதலில் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் எதுவும் உண்மையல்ல என்றும் கூரியிருந்தது,

2011 ஆம் ஆண்டு இவ்வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை, இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்த பிரக்யா சிங் ராம்ஜி கல்சங்கரா என்ற தீவிரவாதிக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி உதவினார் என்றும் மேலும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்துவது தொடர்பான சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட பல ரகசிய கூட்டங்களில் அவர் பங்கெடுத்தார் என்றும் அது கூறியிருந்தது.

ஆனால் இது தொடர்பாக NIA  தரப்பில் இருந்து பதிலளித்த வழக்கறிஞர் அவினாஷ் ரசல் அந்த மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் உடையது அல்ல என்றும் தடவியல் நிபுணர்களால் அந்த மோட்டார் சைக்கிளின் உற்பத்தியாளர் குறித்த தகவல்களை கண்டறிய முடியவில்லை என்றும் மேலும் அந்த வாகனம் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பில் இருந்தே ராம்ஜி இடம் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும், முன்னதாக சதித்திட்டம் நடைபெற்ற போது பிரக்யா சிங் அதில் பங்கு பெற்றதாக கூறிய பல சாத்தியங்கள் தங்களது வக்குமொலங்களை பின்னர் மாற்றிக்கொண்டனர் என்றும் இந்த வழக்கை முன்னர் விசாரித்த தீவிரவாத தடுப்புப் படை சாட்சியங்களை துன்புறுத்தி இந்த வாக்குமூலங்களை பெற்றது என்றும் அது தொடர்பாக பல சாட்சியங்கள் நீதிமன்றத்தில் புகாரளித்திருந்தன என்றும் கூறியுள்ளார்.

இன்னும் பிரக்யா சிங், தற்போது தலைமறைவாக உள்ள இவ்வழக்கில் குற்றம் சாட்டப்படும் ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே யுடன் தொடர்பில் இருந்தார் என்பதை நிரூபிக்கும் எந்த ஒரு எலெக்ட்ரானிக் கருவிகளும் கிடைக்க பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிறகா சிங் குறித்த செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Comments are closed.