8 மாநலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு.

0

இந்தியாவின் எட்டு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்றும் அந்தப் பகுதிகளில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில் அவர், ஜம்மு கஷ்மீர், பஞ்சாப், லக்ஷதீப், மிசோரம், அருணாச்சல பிரதேசம், மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்றும் சிறுபான்மையினராக உள்ள அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் அப்பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கின்றது என்றும் ஆகவே அப்பகுதிகளில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்சின் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தேசிய சிறுபான்மை கமிஷன் விசாரிக்க வேண்டிய வழக்கு என்றும் அதனால் சிறுபான்மை கமிஷனை நாடுமாறும் கூறி அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1993 மத்திய அரசு அறிவிப்பின் படி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டனர். இதன் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த பட்டியலில் ஜைனர்களும் சேர்க்கப்பட்டனர்.

Leave A Reply