8 வழிச்சாலை திட்டம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய தமிழக அரசு மேல்முறையீடு!

0

மத்திய அரசின் நிதி உதவியுடன் சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச்சாலையை அமைப்பதற்கான திட்டம் தொடக்கப்பட்டது. இதற்குத் தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 8 வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பிலும் போராட்டங்களும் பொது மக்காளிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியது.

இதையடுத்து இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments are closed.