80000 அகதிகளை வெளியேற்ற ஸ்வீடன் முடிவு

0

2015 ஆம் வருடம் தங்கள் நாட்டிற்கு வருகை தந்த ஏறத்தாள 80000அகதிகளை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்போவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது. இந்த முடிவினை உள்துறை அமைச்சர் ஆண்டர்ஸ் ஜீமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “நாங்கள் தற்பொழுது ஒரு 60000 நபர்களை பற்றி தான் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இந்த எண்ணிக்கை 80000 ஆக உயரலாம்” என்று தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைபடுத்த காவல்துறை மற்றும் அகதிகள் துறை சார்ந்த அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அகதிகள் வெளியேற்றம் சாதாரண பயணிகள் விமானம் மூலம் நடைமுறைபடுத்தப்படும் என்றும் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் தனி விமானங்களும் இந்த பணிக்காக ஒதுக்கப்படும் என்று கூறுயுள்ளார்.

ஐரோப்பாவோல் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறுவதால் இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிரீசில் 2015 வருடம் மட்டுமே கிட்டத்தட்ட 46000 பேர் அகதிகளாக் வருகை தந்துள்ளனர். இதில் 170 பேர்களுக்கு மேல் தங்கள் பயணத்தின் போதே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9.8 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடான ஸ்வீடன் ஐரோப்பாவிலேயே அதிகளவிலான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 160000 அகதிகளுக்கும் மேலாக தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளது.

சுவீடனின் அண்டைநாடான டென்மார்க் தங்கள் நாட்டிற்கு அகதிகளாக வருபர்களிடம் 1400 டாலர்களுக்கு அதிக மதிப்பிலான பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த அகதிகள் தங்கள் குடும்பதிரனை தங்களுடன் அழைத்துக்கொள்ள மூன்று வருட காலங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றி இருக்கிறது.

Comments are closed.