தலித்கள் பாதுகாப்பில் தீர்ப்பு ஏற்படுத்திய பின்னடைவு…

0

தலித்கள் பாதுகாப்பில் தீர்ப்பு ஏற்படுத்திய பின்னடைவு…

தலித் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் வலுப்பெற்று வரும் நிலையில், அவர்களின் உரிமையைப் பறிப்பதில் நீதிமன்றமும் தனது ‘பங்களிப்பைச் செலுத்தியுள்ளது’ என்று பதறுகிறார்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். வேறொன்றுமில்லை, ‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதான் பதற்றத்துக்கு காரணம். பட்டியலினத்தவரின் பாதுகாப்புக்காக மெல்லமெல்ல கொண்டு வரப்பட்ட மாற்றங்களை அறிந்தால்தான் இன்றைய பாதிப்பின் வலியினை உணரமுடியும்.

தலித்களுக்கு பாதுகாப்பு

காலங்காலமாக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்தார்கள் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும். இவர்கள் வாழ்நிலையில் மாற்றம் ஏற்படுவதற்காக 1955ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் நம்நாட்டில் கொண்டு வரப்பட்டது. 1976இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்  Protection of Civil Rights Act) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எல். இளைய பெருமாள் தலைமையில் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி மத்திய சமூக நலன் மற்றும் சட்டத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. சுமார் 500 பக்கங்கள் “Report of the committee on intouchability, Economic and Educational Development of the Scheduled Castes and Connected Documents 1969” என்ற அந்த அறிக்கை இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளைப் பட்டியலிட்டிருந்தது. மேலும் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் அவர்கள் கொஞ்சங்கூட முன்னேற்றமடையவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்திருந்தார் இளையபெருமாள்.

இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் 1989ஆம் ஆண்டு “தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம்” கொண்டு வரப்பட்டது. ஆனால், 1995 இல்தான் இந்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. என்றாலும், இன்னும் கூட இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதை புது டில்லியிலுள்ள நீதிக்கான தேசிய தலித் இயக்கம் தனது ஆய்வின் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்படுவதில் உள்ள இடைவெளிகளை இந்த அமைப்பு கண்டறிந்து வெளிப்படுத்தியது.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.