கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: பரசுராம் வாக்மோர் குற்றவாளி என்பதை உறுதி செய்த குஜராத் தடயவியல் ஆய்வகம்

0

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: பரசுராம் வாக்மோர் குற்றவாளி என்பதை உறுதி செய்த குஜராத் தடயவியல் ஆய்வகம்

பிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவுற்றிருக்கும் இந்த வேலையில் அவரை கொலை செய்தது பரசுராம் வாக்மோர் தான் என்பதை குஜராத் தடயவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது.

கெளரி லங்கேஷ் கொலை குறித்து விரிவாக படிக்க (இங்கே செல்லவும்)

கெளரி லங்கேஷ் கொலை நிகழ்வுகள் அனைத்தையும் தொகுத்து அவர் கொலை செய்யப்பட்ட தினத்தின் CCTV வீடியோக்களையும் ஆராய்ந்து அந்த ஆய்வறிக்கை தடயவியல் அறிவியல் இயக்குனரகத்திற்கு(FSL) அனுப்பட்டது என்றும் பின்னர் அந்த ஆய்வறிக்கையில் பரசுராம் வாக்மோர் தான் இந்த கொலை செய்தது உறுதியாகியுள்ளது என்று தடயவியல் அறிவியல் இயக்குனரகம் தெரிவித்ததாக சிறப்பு புலனாய்வுதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர், “இந்த இரு காட்சிகளிலும் காணப்படும் நபர் ஒருவர் தான். இந்த கண்டுபிடிப்பு தாங்கள் நடத்திய விசாரணை முடிவுகளை உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த அறிக்கை தங்கள் மேலிடதிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் இதுவரை 12 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவ்வழக்கில் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை இவர்களை தேடும் பணியை துவக்கியதும் இவர்கள் அனைவரும் தலைமைறைவாகிவிட்டார்கள். இவர்கள் மகாராஷ்டிரா மற்றும் கோவாவை சேர்ந்தவர்கள்.” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இத்துடன் கர்நாடகாவில் இந்த குழுவை சேர்ந்த சுமார் 50 நபர்கள் அடயாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் மிகப்பெரிய குழு என்றும் இவர்களுக்கு இந்தியா முழுவதும் தொடர்பு உள்ளது என்றும் இதில் அடையாளம் காணப்பட்ட நபர்களைக் குறித்து தங்கள் மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இனி இது குறித்து அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே குழு தான் ஒன்பது வருடங்களுக்கு முந்தைய மார்க்கோ குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை கொலை செய்யப்பட்ட பகுத்தறிவுவாதிகள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 26 நபர்களை கொலை செய்ய பட்டியல் ஒன்றை இவர்கள் தயார் செய்து வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த குழுவிற்கு கர்நாடகாவில் மனோஹர் மற்றும் சுஜித் ஆகியோர் ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்றும், அமோல் காலே இந்த தீவிரவாத கும்பலுக்கு தலைவன் போல் இருந்து செயல்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2009 ஆண்டு சனாதன் சன்ஸ்தா அமைப்பை உருவாக்கிய ஜெயந்த் பாலாஜி அதாவலே எழுதிய புத்தகங்கள் கிடைக்கபெற்றுள்ளது. தற்போது புனேவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை சனாதன் சன்ஸ்தா அமைப்பு மறுத்து வருகிறது.

 

Comments are closed.