0

தமிழர் கலாச்சாரத்திற்கு விரோதமான விநாயகர் ஊர்வலங்கள்!

செங்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட சங்க பரிவார கும்பல்கள்: நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் தமிழக காவல்துறை

2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாசிச பா.ஜ.க. தனது சுயரூபத்தை காட்டத் துவங்கியுள்ளது. மக்களிடம் சென்று அரசின் ஐந்து ஆண்டுகால செயல்பாடுகளை சொல்லி வாக்கு சேகரிக்க இயலாது என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த சூழலில்தான் தமிழகத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை பயன்படுத்தி வன்முறைகள் மூலம் தங்களின் இருப்பை நிரூபித்து மக்களிடம் அமைதியின்மையை உருவாக்கி அரசியல் இலாபம் ஈட்டும் பா.ஜ.க.வின் மதாவாத சூத்திரத்தை தமிழகத்தில் கையில் எடுத்து வருகின்றது.

அவர்களை விமர்சிக்க கூடியவர்களின் மீது தாக்குதல் நடத்துவதுடன் போலீஸ், நீதிமன்றம், பெண்கள் உட்பட அனைவரையும் அசிங்கமான வார்த்தைகளை கொண்டு வசைபாடுவது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருபவர்கள் தமிழகத்தில் தற்போது நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் கலவரம் செய்யும் போது தடுத்து நிறுத்துங்கள் என்று காவல்துறையிடம் முறையிட்ட போது பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரிகள் எங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்றும் மேலிட உத்தரவைத்தான் நாங்கள் பின்பற்ற முடியும் என்றும் தெரிவித்ததுதான் பாசிச பா.ஐ.க. இந்த கலவரங்களை மத்திய அரசின் ஆசியுடன் அல்லது அவர்கள் வகுத்து கொடுத்துள்ள செயல் திட்டத்தை திட்டமிட்டு நடத்தியது என்பதற்கு சான்றாகும். முஸ்லிம்கள் விநாயகருக்கு எதிரானவர்கள் அல்ல. இந்து நண்பர்களின் கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளை தடுக்கக் கூடியவர்களும் அல்ல. எத்தனையோ ஊர்களில் கோவில் விழாக்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியை சேர்ந்த பாசிச பா.ஜ.க.வின் வன்முறை கும்பல் கலவரங்களை ஏற்படுத்துவதைத்தான் அமைதியை விரும்பும் அனைவரும் எதிர்த்து வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தியின் போது இதுபோன்ற பதட்டம் இருந்ததில்லையே ஏன்? என்ற கேள்விக்கு பதில்தான் பாசிச பா.ஜ.க.வின் மதவாத வன்முறை அரசியல் ஆகும். எனவே, பாசிச பா.ஜ.க.வின் வன்முறை வெறியாட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் நோக்கில்தான் இந்த முறை விநாயகர் சதுர்த்தியின் போது நடந்த வன்முறைகளை பதிவு செய்துள்ளோம்.

-ஆசிரியர்.

தமிழகமும் விநாயகர்சதுர்த்தியும்

‘‘என் தந்தை தீவிர வைணவராக இருந்தாலும் விநாயக சதுர்த்தியன்று பிள்ளையாரை வழிபடச் சொல்வார். சங்கத்தமிழ் மூன்றும் யார் தந்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பார். காலணாவிற்குக் கூட விநாயகர் களிமண் பொம்மை கிடைக்கும். ஒரு முறை தாமிரபரணியில் அதைக் கரைய விடும் போது ஏன் கரைக்க வேண்டும் என்று கேட்டேன். ‘‘களிமண் பொம்மை அதிகநாட்கள் தங்காது; ஊனமான விநாயகரை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது, நமக்குத்தான் பிள்ளையார் படித்துறையில் என்றும் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் இருக்கிறாரே, அவர் என்றும் இருப்பார். இவர் வருடம் ஒருமுறை நமக்காக வீட்டிற்கு வருகிறார்” என்றார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எல்லாம் கேள்விப்பட்டதே கிடையாது. எங்கள் விநாயகர் எளிய விநாயகர். வீட்டிற்கு வரும் விநாயகர். அரசர் மாதிரி ஒப்பனை செய்து கொண்டு ஊர்வலம் வரும் விநாயகர் அல்ல. இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது.

‘‘இந்தியா என்றுமே இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா இந்தியர்களுக்கு சொந்தமானது” என்று கூறுகின்ற முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரியும் எழுத்தாளருமான பி.ஏ. கிருஷ்ணனின் வார்த்தைகளில் இருந்து தமிழர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கு பண்பாட்டிற்கும் சிறிதும் தொடர்பில்லாத விநாயகர் ஊர்வலங்கள் தமிழ் மக்களிடையே ஒரு கலாச்சாரமாக ஊன்ற மதவாத இயக்கங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எவ்வளவு பெரிய விளைச்சலை தந்துள்ளது என்று நோக்கும்போது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Comments are closed.