0

பாதுகாப்பற்ற தேசம்?

‘இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் நமது நாட்டிற்கு உண்மையான சுதந்திரம்’ என மகாத்மா காந்தி குறிப்பிட்டார்கள். அவரின் உண்மையான சுதந்திரம் என்ற அந்த கனவு நிறைவேறா கனவாக நிலைத்துவிடும்போல் தெரிகிறது. ‘பெண்கள் இந்நாட்டின் கண்கள்’ என்று போற்றப்படுகிறார்கள். இந்தியாவின் எல்லா நதிகளுக்கு பெண்களின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களில் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

தற்போதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் தாங்கள் பாதிக்கப்படும் சமயங்களில் மௌனியாக நில்லாமல் துணிந்து வெளியே சொல்கிறார்கள். பெண்கள் வேலைகளுக்கு செல்வதிலும் பல்வேறு துறைகளில் பங்காற்றுவதிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது என்பது ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

ஆனால் மறுபக்கம் இந்த தேசம் பெண்கள் வாழ தகுதியற்றதாக உருமாறிவிடுமோ என்ற அச்சம் மனதில் நிறைந்து நிற்கிறது. ஹரியானா மாநிலம் ரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்ற 19 வயது மாணவி கடந்த 12.09.2018 அன்று கடத்தப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு தேசத்தை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அதே மாநிலத்தில் ஜிந்த் மாவட்டத்தில் 15 வயது சிறுமியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளது பிறப்புறுப்பு கூர்மையானஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக உடல் கூராய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இக்கொடுஞ்செயலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது. இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Comments are closed.