0

பீம் ஆர்மி: சந்திரசேகர் ஆசாத் – பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் சந்திப்பு!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ரவானை உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்திலுள்ள சுட்மல்பூர் கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்டி-ன் வடக்கு மண்டல தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கி.ஷி. இஸ்மாயில் தலைமையிலான பிரதிநிதிகள் குழு சந்தித்தது.

அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல செயலாளர் அனீஸ் அன்சாரி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலானா முஹம்மது ஷாதாப் மற்றும் பிற மாநில நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தலித்களின் உரிமைகள் மற்றும் அரசு அடக்குமுறைக்கு எதிரான அவரது நீண்ட நெடிய போராட்டத்திற்காக சந்திரசேகர் ஆசாத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் பிரதிநிதிகள் குழு வாழ்த்து தெரிவித்தது.- –உத்தர பிரதேச மாநில அரசால் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) விதிக்கப்பட்டு பல மாதங்கள் சிறையிலிருந்த ஆசாத் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.

பீம் ஆர்மி சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனுபவித்த துன்புறுத்தல்கள் என்பது வருங்காலங்களில் மதவாத மற்றும் ஜாதிய சக்திகளை தோற்கடித்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அதிகாரத்தை தனது கைகளில் எடுப்பதற்கு வழி வகுக்கும் என்பதை கி.ஷி இஸ்மாயில் சுட்டி காண்பித்தார்.

தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் சிறையில் இருந்த பொழுது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக பாப்புலர் ஃப்ரண்ட்-க்கு ஆசாத் நன்றி தெரிவித்தார்.

-Goto Index


Comments are closed.