வேண்டாம் UAPA

0

UAPA சட்டம் இயற்றப்படும் போது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இச்சட்டத்திற்கெதிராக பல்வேறு எம்.பி.க்கள் கண்டனக் குரல் எழுப்பியதையும் இச்சட்டத்தினால் ஏற்படும் தீய விளைவுகளையும் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இங்கு காண்போம்.

பெயில்

பெயில் வழங்குவது என்பது எந்த ஒரு குற்றத்திலும் கைது செய்யப்பட்டவருக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமையாகும். பெயில் கொடுப்பது குற்றம் சுமத்தப்பட்டவர் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க கொடுக்கப்படும் அவகாசம் மட்டுமல்ல. மாறாக ஒரு வேளை அவர் நிரபராதி என்ற நிலையில் வழக்கு முடியும் காலம் வரை சிறையில் அடைப்பதே ஒரு தண்டனையாக மாறிவிடும் என்பதால்தான். UAPA சட்டத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நடைமுறையில் பெயில் வழங்குவதில்லை. அவர்களில் பெரும்பாலும் பல ஆண்டுகள் சிறையிலே கழிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பின்னர் நிரபராதி என்று வெளியே விடப்படுகிறார்கள். அவர்களது சிறையில் வீணாகிய வாழ்க்கையை யார் திரும்ப தருவர்?

UAPA சட்டத்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது

பொதுவாகவே ஏதேனும் ஒரு குண்டுவெடித்தால் அது முஸ்லிம்கள்தான் செய்திருக்க வேண்டும் என்று தெரிந்தோ தெரியாமலோ காவல்துறை எண்ணுகிறது. முஸ்லிம்களை மட்டுமே விசாரிக்கிறார்கள். முஸ்லிம்களை மட்டுமே கைது செய்கிறார்கள். இன்று காவல்துறை போலியான திருட்டு வழக்கு புனைகிறார்கள். கொலை வழக்கு புனைகிறார்கள். மேலும் பல சிறு சிறு வழக்குகளில் போலி வழக்கு புனைகிறார்கள். இவையெல்லாம் அன்றாட நிகழ்வுகளாக இருப்பது நாம் அனைவரும் அறிவோம்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Leave A Reply