அதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி

0

“முகம்மதியர் ஆட்சி முதன் முதல் பெரிய அளவில் இந்தியாவில் நிறுவப்பட்டது அலாவுத்தீன் கில்ஜி காலத்தில்தான்” டாக்டர் தே.வெ. மகாலிங்கம் வரலாற்றுத்துறைத் தலைவர் சென்னைப் பல்கலைக்கழகம். (கலைக்களஞ்சியம், தொகுதி ஒன்று, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1954, பக்கம் 217)

‘தாரிக் இ பக்ருத்தீன் முபாரக் ஷா’ (Tarikh-e-Fakhruddin Mubarak Shah) எனும் நூலை பக்ரூத்தீன் முபாரக் கி.பி. 1206ல் தந்துள்ளார். இவர் 1206ல் பட்டத்திற்கு வந்த குத்புத்தீன் அய்பெக்கின் அரசப் பொறுப்பு ஏற்பு நிகழ்வை நேரில் கண்டவர்.

இவர் தனது நூலில் 64 துருக்கிய மரபுகள் அடங்கிய பட்டியல் ஒன்றை நமக்குத் தந்துள்ளார். பெர்சிய மொழியில் எழுதப்பட்ட அந்த நூலை சர். டென்னிசன் ரோஸ் இலண்டனில் 1927ல் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதில் Fakhruddin gives a list of sixty four Turkish tribes in which he includes Turk, Ghuz, Khaji, Tatar, Ughus, Qai etc (Fakhruddin Mubarak, Tarikh i Fakhrddin Mubarak Sha, C. 6024, Edited by Sir Denison Ross, London, 1927, page 47.

64 துருக்கிய மரபுகள் பட்டியலில் கில்ஜிக்களுடைய பெயர் இடம் பெற்றுள்ளது.

சர். ஓலப்கரோ, பதான்களுடைய வரலாற்றை எழுதும் போது கில்ஜிக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் கில்ஜிக்களை ஆப்கானியர்கள் என்று குறிப்பிட்டாலும் அவர்கள் துருக்கிய இனத்தின் வேரிலிருந்து தோன்றியவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். (Sir Olaf Carue, The Pathans, Macmillan & co, London 1959)

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த இபின் ஹோகல் என்ற அரபு புவியியல் வல்லுநர் கில்ஜிக்கள் துருக்கியரே என்று கூறியுள்ளார். (Ibn Houkal, Ashkalul Balad, Bib Geographim Arabicorum. C. 367.H. A.D. 977)

இந்துஸ்தானத்திற்கும் சிஜிஸ்தானத்திற்கும் இடையேயுள்ள பகுதிகளில் கில்ஜிக்கள் நெடுங்காலம் வாழ்ந்திருந்தனர். அப்பகுதிகளில் ஒன்று கில்ஜி என்பதாகும். ஆகவே அவர்கள் கில்ஜிக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களது பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள் துருக்கியர்களுடைய பழக்க வழக்கங்களையும், அவர்களது ஆடைகளையும் ஒத்திருந்தன என்று கூறியுள்ளார்.

“they are rich in cattle and their habits, customs and dress are like those of the Turks” (Ibn Haukal. Kitab moujamul Buldan, II, p. 419. and Journal of the Asiatic society of Bengal, 1852, 368, 1853, 152.

இஷ்டகாரி (Ishtakari) போன்ற ஆசிரியரும் கில்ஜிகளை துருக்கியர்களாகவே கருதுகின்றார்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Comments are closed.