கர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்

0

கர்பப்பை நீர்க்கட்டிகளை ஆங்கில மருத்துவத்தில் Polycystic ovary syndrome, சுருக்கமாக PCOS என்கிறார்கள். பிரபல அமெரிக்க மருத்துவரும், மருத்துவ ஆலோசகருமான ஹிலாரி ரைட் தனது PCOS – Diet Plan புத்தகத்தில் இதுபற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன. Cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள், Poly என்பது பல என்பதைக் குறிக்கும். ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே Cystic Ovarian Syndrome எனப்படுகிறது.

அதாவது பெண்களுக்கு உண்டாகும் இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளாவன அவர்களது குழந்தை சுமக்கும் ஏதுவான அல்லது தகுதியான 15&44 வயதுடைய பெண்களுக்கு காணப்படுகிறது என்கிறார். பொதுவாக ஒரு பெண் முதல் மாதவிடாயை அடைந்து இரண்டாவது மாதவிடாயில் இந்த கட்டிகள் உருவாகத் தொடங்குகின்றன.

இந்த கட்டிகள் உருவாக முதல் காரணமாக அவர் கூறுவது, பெண்களுக்கு உருவாகும் முதிர்ச்சியடையாத கருமுட்டைகள். கருவுறாத நிலையில் அவை நாட்கள் கடந்தவுடன் தானாக வெடித்து அந்த உதிரம் அவர்களுக்கு மாதவிடாயாக வெளியேறுகிறது. அப்படி இயற்கையாக வெடிக்காமல் கர்பப்பை (சினைப்பை) உள்ளாகவே தேங்கி நின்றால் அவர்களுக்கு மாதாந்திர மாதவிடாய் சரியாக வராது. அதனை Irregular Periods என்கிறோம். இதுபோல மாத தவணையில் வெளியேறாத முதிர்வு பெறாத முட்டைகளே பிறகு நீர்க்கட்டிகளாக மாறி பிரச்சினை செய்ய தொடங்குகிறது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Comments are closed.