எழுத்திலிருந்து சிந்தனையை நோக்கி

0

“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் தன் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.”(அல்குர்ஆன் 22:11)

ஆரம்பக்கட்டத்தில் இஸ்லாத்தை தழுவியவர்கள் அதன் உள்ளார்ந்த பொருள் மற்றும் மனிதகுல விழுமியங்களால் ஈர்க்கப்பட்டு அவை நிலைநாட்டப்பட உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாம் வேகமாக பரவி ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவியபோது சிலரிடமிருந்து பழைய விழுமிய உணர்வும், தியாக மன நிலையும் காணாமல் போனது. அவர்கள் இஸ்லாத்தின் செயல்பாடுகளின் உள்ளார்ந்த பொருளை கவனிக்காமல் பெயரளவில் இஸ்லாத்தை கடைப்பிடித்தனர். இஸ்லாத்தின் வெற்றிகளில் மகிழ்ச்சியடைந்தவர்கள், இழப்புகள் ஏற்படும்போது விலகிச் சென்றனர்.பொருளாதார இழப்புகளும், உடல் ரீதியான சிரமங்களும் அவர்களை அதிருப்தியடையச் செய்தன. இதன் காரணமாக இஸ்லாம் இவ்வுலகில் வழங்கும் திருப்திகரமான வாழ்வும், மறுமையில் வழங்கப்படும் நிலையான சமாதானமும் அவர்களுக்கு அன்னியமாகின. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Comments are closed.