என் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு

0

நான் விடுதலையாகப் போகும் நாளை எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பு என்னை அழுத்தியது. தம்பி ரெஜினால்ட் வந்து, எப்படியாவது என்னை வெளியில் அழைத்துச் சென்று விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

மதிய உணவுக்காக, வரிசையில் நின்று சாப்பாடு வாங்கிய போது வழக்கம் போல பன்றி இறைச்சி தரப்பட்டது. இறைச்சித் தட்டை சக கைதியிடம் கொடுத்தேன். உணவுக்கூடத்துக்கு வரும் முன்பே, தம்பி ரெஜினால்ட் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டேன்.

“நான் பன்றிக் கறி சாப்பிடுறதில்ல..”

பன்றி இறைச்சியைப் பெற்றுக் கொண்ட அந்தக் கைதி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். அமெரிக்காவில், அதுவும் ஒரு கறுப்பினத்தவன் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டான் என்பது, நம்புவதற்கு சிரமமான ஒன்றாகும்.

சிறையில் வழக்கத்துக்கு மாறாக எது நடந்தாலும் அது அங்கு விவாதப் பொருளாகிவிடும். இப்போது சிறையின் விவாதப் பொருள்:

‘சைத்தான் பன்றிக் கறி சாப்பிடுறதில்லையாம்!’

சிறைக்குள் என்னுடைய மாற்றத்தை கவனித்து வந்த அக்கா யெல்லா, சார்லஸ் டவுன் சிறையிலிருந்து மசாசூட்டஸ் நகரில் உள்ள நார்ஃபோல்க் சிறைக்கு என்னை மாற்ற முயற்சி எடுத்து வந்தாள்.

நாகரிகமான சிறை என்று சொல்லலாம் நார்ஃபோல்க் சிறையை. நான் அங்கு மாற்றப்பட்டேன். ஒரு தொகுப்பு வீடு போல இருந்த நார்போல்க் சிறையின் சிறப்பம்சம் அங்கு இருந்த நூலகம்தான். அது என்னுடைய வாசிப்பு பசிக்கு நன்றாக தீனி போட்டது.

இருந்தாலும் தம்பி ரெஜினால்டின் அந்த வார்த்தை இன்னும் நினைவில் இருந்து அகலவில்லை. இந்தச் சிறைக்கு வந்த பின்பும் நான் சிகரெட் புகைக்கவில்லை, பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. எப்படியும் தம்பி ரெஜினால்ட் என்னை சிறையில் இருந்து விடுவிப்பான் என்று நம்பினேன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index


Comments are closed.