காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை தவறானது – ஐ.நாவில் மலேசிய பிரதமர் மகாதீர் உரை!

0

மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மத், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் உரையாற்றியுள்ளார்.

அப்போது பேசிய மகாதீர், ஐநாவின் தீர்மானம் இருந்த போதும் ஜம்மு காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த நடவடிக்கை மிகவும் தவறானது என்று வலியுறுத்தினார். அமைதியான வழிமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

இந்தியா இந்த விவகாரத்தில் பாகிஸ்தானோடு இணைந்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார். ஐநாவின் கோரிக்கைகளை புறக்கணிப்பது சட்டநீதியைப் புறக்கணிப்பது என மகாதீர் தெரிவித்தார்.

ஆனால் ஐ.நா பொதுப் பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில் காஷ்மீர் விவகாரம் பற்றி வாய்த்திறக்காமல் மௌனம் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.