டாக்டர் கஃபீல் கானுக்கு வழங்க வேண்டிய அனைத்து தொகையையும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

டாக்டர் கஃபீல் கான் வழக்கு: உத்திர பிரதேச அரசு அவருக்கு வைத்துள்ள அனைத்து பாக்கி தொகையயும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 70க்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்துகொண்டிருந்த போது, அங்கு பணியாற்றிய டாக்டர் கஃபீல் கான் என்பவர் தன் சொந்த செலவில், தனது காரில் சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து மேலும் குழந்தைகள் இறக்காமல் காப்பாற்றினார்.

ஆனால் அவரையே குற்றவாளியாக சித்தரித்த உ.பி அரசு அவரை சஸ்பெண்ட் செய்ததோடு, அவரை சிறையில் அடைத்தும் துன்புறுத்தியது. பல வித போராட்டங்களின் பின்பு கஃபீல்கான் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், டாக்டர் கஃபீல் கானை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை சஸ்பெண்ட் செய்யப் பட்ட காலங்களில் அவருக்கு வழங்க வேண்டிய சம்பள தொகையையும் உபி அரசு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments are closed.