இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவாக்களின் உண்மை முகத்தை வெளியிட்ட அமெரிக்க ஆய்வு!

0

இந்தியாவில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மோடியின் முதல் ஆட்சியில் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்பதற்கான தாக்குதல் அதிகரித்துள்ளது. இத்தகைய தாக்குதல் நடத்துவதை இந்துத்துவாக்களே சமூக வலைதளத்தில் தைரியமாக பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு தாக்குதல் நடத்துவதால் சமூக வலைதளத்தில் பலர் இதனை எதிர்க்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் “சர்வதேச மதச் சுதந்திரம்” குறித்த 2018-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், ”இந்தியாவில் 2018ம் ஆண்டு மக்கள் தொகையின் எண்ணிக்கை படி 130 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். இதற்கு முன் 2011ம் ஆண்டு இருந்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்களாகவும், 14.2 சதவீத மக்கள் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதமும், சீக்கியர்கள் 1.7 சவீதமும் வாழ்கின்றார். மற்ற மதத்தை சார்ந்தவர்கள் 1 சதவீதம் பேரும் வாழ்கின்றார்”. என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் 2018ம் ஆண்டு, இந்துத்துவா கும்பல்களால், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் மீதான் இந்த தாக்குதல்களுக்கு ஆட்சியாளர்களும் துணைபோவதாகவும் அமெரிக்க ஆய்வு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 18 முறை வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதரீதியான கொலைகள், மதத்திற்காக தாக்குதல், பாகுபாடு காட்டுதல், சிறுபான்மையினர் உடைமைகளை சூறையாடுதல் மற்றும் தனி நபர் விரும்பும் மதத்தை, நம்பிக்கையை பின்பற்றலாம் என்ற உரிமையை நசுக்கும் வேலைக இந்தியாவில் நடந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மதரீதியில் ஆட்சி நடத்தும் பாஜகவின் உண்மை முகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

 

 

Comments are closed.