95% மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் இந்துக்கள் – நீதிபதி சச்சார்

0

இந்தியாவில் முஸ்லிம்களை விட இந்துக்கள்தான் அதிகளவில் மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்று டில்லி உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ராஜேந்திர சச்சார் கூறியுள்ளார். இதனை அவர் மதுராவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றிய பொழுது கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது ” கிட்டத்தட்ட 95% மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் இந்துக்களே, இருந்தும் தாத்ரியில் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என கூறி அடித்தே கொல்லப்பட்டார். இது மனித இனம் மட்டும் மனிதநேயத்தின் மரணமாகும். சாப்பிடும் வழக்கத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை. தேவையென்றால் நான் கூட மாட்டிறைச்சி உண்ணலாம்” என்று கூறியுள்ளார். மேலும், ” (பா.ஜ.க.எம்.எல்.எ. சங்கீத் சோம் ஐ மறைமுகமாக சுட்டிக்காட்டி) எம்.பி.களும் எம்.எல்.ஏ.களும் கூட மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படியிருக்க சாதாரண பொதுமக்களை ஏன் வலதுசாரி கும்பல் குறிவைக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதி சச்சாரின் இந்த வார்த்தைகள் பலரை திடுக்கிட செய்தது. இந்த மாநாட்டில் பங்கெடுத்த பலரும் அரங்கத்தை விட்டு வெளியேறினர். சிலர் அரங்கத்தின் ஃபேன் லைட்டுகளை நீதிபதியின் பேச்சை நிறுத்த வைப்பதற்காக அனைத்தனர்.
இந்த மாநாடு தீவிரவாத இஸ்லாம் குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.