CAA சட்டத்தை எதிர்த்து போராடிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சிறையிலிருந்து விடுதலை

0

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய காங்கிரஸ் பிரமுகர் சதாப் ஜாபர், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியும் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்த பாஜக அரசு சிறையில் தள்ளியது.

இந்நிலையில் லக்னோ நீதிமன்றம் அவர்களுக்கு கடந்த 4ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. சதாப் ஜாபர், எஸ்.ஆர். தாராபுரி உட்பட மொத்தம் 13 பேருக்கு ஜாமீன் கிடைத்தது.

ஆனால் அம்மாநில பாஜக அரசு, நீதிமன்றம் உத்தரவிட்டு 3 நாட்களுக்கு பிறகுதான் விடுவித்தது. விடுதலைபெற்று வெலிவந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மலர் மாலை அணிவித்தும், முழக்கங்களை எழுப்பியும் வரவேற்றனர்.

Leave A Reply