போபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்

0

போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி வந்த செயற்பாட்டாளர் அப்துல் ஜப்பார் உடல் நலமின்றி நேற்று காலமானார்

போபாலில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இரவு அங்குள்ள யூனியன் கார்பைடு எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென நச்சுவாயு கசிந்து போபால் நகரம் முழுவதும் பரவி 2,259 உயிரிழந்தனர். அதறன் பிறகு இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் விஷவாயு தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

விஷவாயுவின் கசிவினால் அப்துல் ஜப்பாரின் பெற்றோரும் உயிழிந்தனர். இதற்கு நீதி கிடைக்கவும் தகுந்த நிவாரணம் பெறவும் ‘போபால் கேஸ் பீடிட் மஹிலா உத்யோக் சங்காதன்’ என்ற அமைப்பை ஜப்பார் தொடங்கி, டெல்லியில் அவர் நடத்திய எதிர்ப்புப் பேரணிகள் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் நீதி கேட்டுப்போராடிய செயற்பாட்டாளர், அப்துல் ஜப்பார் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ”செயற்பாட்டாளர் அப்துல் ஜபாருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். அவர் விரைவில் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்” என நேற்று தெரிவித்தார். ஆனால், நுரையீரல் பிரச்சினை காரணமாக நேற்றிரவு அப்துல் ஜப்பார் மருத்துவமனையிலேயே காலமானார்.

Comments are closed.