முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

0

மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டப்பிரிவு 370-யும் நீக்கியது. பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிறித்தது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லாஹ், உமர் அப்துல்லாஹ் மற்றும் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் பாஜக அரசால் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்படடுள்ளனர். இதுவரை அவர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது.

கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்காவலிலுள்ள ஃபரூக் அப்துல்லாஹ், உமர் அப்துல்லாஹ் மற்றும் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதன.

‘பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்து 2 வருடங்கள் வரை சிறையில் வத்திருக்கலாம். இதில் கைது செய்தவர்களை எதற்காக கைது செய்கிறோம் எ அறிக்கை கூட சமர்பிக்க தேவையில்லை’ என்றார் காவல்துறை உயர் அதிகாரி.

Comments are closed.