ABVP க்கு எதிராக களமிறங்கிய கார்கில் உயிர்த்தியாகியின் மகள்

0

டில்லி பல்கலைகழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரி மாணவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் உமர் காலித்தை தங்கள் கல்லூரியில் உரையாற்ற அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். இன் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி. ராம்ஜாஸ் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை காவல்துறையினரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தனர். சில மாணவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த தாக்குலில் சுமார் 20 மாணவர்களுக்கு காயங்கள் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் நாடெங்கிலும் உள்ள மாணவர்களின் மத்தியில் ஏ.பி.வி.பி. க்கு எதிரான மனநிலை பெருகி வருகிறது. ABVP யினரின் இந்த செயலை கண்டித்து கார்கில் போரில் உயிரிழந்த வீரரின் மகள் தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மாணவியான குர்மெஹர் கவுர் ஒரு புகைப்படத்தை பகிருந்திருந்தார். அதில் அவரது கையில் ஒரு பதாகையை பிடித்திருந்தார். அந்த பதாகையில், “நான் டில்லி பல்கலைகழக மாணவி. நான் ABVP யை கண்டு அஞ்சவில்லை. “நான் தனியாக இல்லை. இந்தியாவின் அனைத்து மாணவர்களும் என்னுடன் உள்ளனர். #StudentsAgainstABVP” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது.

அப்பாவி மாணவர்கள் மீதான ABVP யினரின் தாக்குதல்களை கண்டித்துள்ள கவுர், தனது பதிவில், “இது போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் அல்ல மாறாக ஒவ்வொரு இந்தியரின் மனதில் உள்ள ஜனநாயகம் என்ற சொல்லின் மீதான தாக்குதல்.  இது இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரின் கொள்கைகள், ஒழுக்கங்கள், சுதந்திரம் மற்றும் உரிமைகளின் மீதான தாக்குதல்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ABVP யினரை நோக்கி, “நீங்கள் எறிந்த கற்கள் எங்கள் உடலில் பட்டன, ஆனால் எங்களது சிந்தனைகளை அவை காயப்படுத்தவில்லை. தற்போதைய என்னுடைய இந்த புகைப்படம் உங்களது அச்சத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக எனது வழியிலான போராட்டம்.” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவை அடுத்து அவருக்கான ஆதாரவு குவியத்தொடங்கியது. கவுரின் கருத்துக்களை ஆதரித்த ஆயிரக்கணக்கானோர் அவரது பதிவுகளை பகிரத் தொடங்கினர். மேலும் பலர் தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வன்னம் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களுக்கு பதில் கவுரின் புகைப்படங்களை மாற்றிக்கொண்டனர்.

இப்படியிருக்க அவருக்கு எதிரான கருத்துக்களையும் சிலர் பகிர்ந்தனர். சிலர் கவுரின் தந்தை எதற்காக மரணித்தாரோ அதனை கவுர் புரிந்துகொள்ளவில்லை என்றும் சிலர் அவரை தேச விரோதி என்றும் தூற்றத் தொடங்கினர். அவர்களுக்கு பதிலளித்த கவுர், “எங்களுடைய போராட்டம், தேசவிரோதிகளுக்கானதா? இல்லை. இது மாணவர்களுக்கானது. கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், கருத்து சுதந்திரத்திற்குமான போர்ராட்டம் இது/” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த குர்மெஹர் 1999 இல் நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் தனது தந்தையை இழந்தவர். அப்போது அவருக்கு வெறும் இரண்டு வயது தான். இந்த சம்பவம் அவர் வளரும்போது பாகிஸ்தான் மீதான அவரது வெறுப்பையும் சேர்த்தே வளர்த்தது. அவர் தனது ஆறாவது வயதில் புர்கா அணிந்த ஒரு பெண்ணைக் கண்டு அவர்தான் தனது இந்த நிலைக்கு காரணம் என்று எண்ணி அவரை கத்தியால் குத்த முயர்ச்சித்துள்ளார். இந்த சம்பத்திற்கு பிறகு அப்பெண்ணின் தாய் பொறுப்புணர்ச்சியுடன் தன் மகளிடம் சூழ்நிலைகளை விளக்கி, தன் தந்தை இறந்ததற்கு காரணம் யுத்தம் என்று கூறி புரிய வைத்துள்ளார்.

Comments are closed.