‘JNUவில் கஷ்மிரி போல இருந்த மாணவரை கடுமையாக தாக்கினோம்’-ஒப்புக்கொண்ட ABVP

0

CAA, NRC மற்றும் NPR போன்ற சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்ட வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று மாணவர்கள் மீது ஆ.எஸ்.எஸ்-ஐ சார்ந்த ABVP அமைப்பின் தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜே.என்.யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை டெல்லி காவல் துறை வெள்ளிக்கிழமை (நேற்று) அடையாளம் கண்டுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

வன்முறையில் ஈட்டுபட்ட ஏபிவிபி உறுப்பினர்களில் ஒருவர் அக்சட் அவஸ்தி, இவர் முதலாம் ஆண்டு BA (french) படித்து வருகிறார். மற்றொருவர் Phd படித்து வருகிறார். இவர்கள் வளாகத்திற்குள்ளே சென்று சீர்குலைக்க முக்கிய காரணமாக செய்லபட்டார்” என்பதும் தெரியவந்தது.

வன்முறை நடத்திய ஒருவர் கூறுகையில், “வன்முறையின் போது தாடி வைத்துகொண்டு காஷ்மீரி போல ஒரு மாணவர் இருந்தார். இதனையடுத்து அருகே கிடந்த ஒரு கொடியிலிருந்து குச்சியை உருவி நான் அவரை கடுமையாக தாக்கினேன்” என்றார்.

மேலும் மற்றோருவர் கூறுகையில், “கண்ணாடியை உடைக்கும்போது பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிவது மிக அவசியம் என்பதால் வளாகத்திற்குள் ஹெல்மெட் அணிந்து கண்ணணாடிகளை உடைத்து தாக்குதலில் ஈட்டுபட்டோம்” என்றார்.

ஜே.என்.யுவில் நடந்த இந்த வன்முறையை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 20 பேர் நடத்தியதாக, அவர் தாக்குதல் நடத்தியவர் தெரிவித்தார்.

இது குறித்து ஏபிவிபி அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திருப்பதி தெரிவிப்பதாவது, “தாக்குதலில் நடத்திய இருவருமே ஏபிவிபி-ஐ சேர்ந்தவ்ர்கள் இல்லை. ஏபிவிபியால் எந்த  பொறுப்பும் வழங்கப்படவில்லை” என்றார்.

Comments are closed.