காவலாளிகளுக்கும் ABVP இந்துத்துவா கும்பலுக்கும் தொடர்பு உள்ளது- JNU மாணவர் சங்கத் தலைவர்

0

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகத்தை துணியால் மறைத்தபடி இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ABVP இந்துத்துவா கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொடூரமாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் காயமடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

“பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து, விடுதியில் போராடத் தயாராக இருந்த மாணவர்கள் மீது முகமூடி அணிந்து வந்து தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்ட தாக்குதல் ஆகும். கண்மூடித்தனமான இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆபாசமான வார்த்தகளால் திட்டினர்.

உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை, சுத்தியல், இரும்பு கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்ளை கடுமையாக தாக்கினர். காவலாளிகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு உள்ளது.

காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில்தான் இருந்தனர். ஆனால், தாக்குதல் சம்பவத்தின்போது எந்த நடவடிகையும் எடுக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.