மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்

0

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், அவ்வபோது சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதில் நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உணவு தேவை என ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு சத்யராஜ் மகள் தெரிவித்துள்ளார்.

Comments are closed.