பாஜக, அதிமுக வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

0

கேரளத்தில் பாஜக வேட்பாளா்கள் மற்றும் அதிமுக வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கேரள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அதில், கண்ணூா் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவா் என்.ஹரிதாஸின் வேட்புமனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்தாா்.

இதேபோல், திருச்சூா் மாவட்டத்தில் உள்ள குருவாயூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில மகளிா் பிரிவு தலைவரான நிவேதிதாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

மேலும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் வேட்பாளராக ஆா்.எம்.தனலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

தலச்சேரி, குருவாயூா் ஆகிய தொகுதிகளில் மாற்று வேட்பாளா்களை பாஜக நிறுத்தவில்லை. தேவிகுளத்தில் அதிமுக மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் மனு தாக்கலின்போது நிராகரிக்கப்பட்டது.

Comments are closed.