பொதுக்கூட்டத்தில் மாற்றி மாற்றி உளறித் தள்ளிய அதிமுக தலைவர்கள்

0

தமிழகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் உளாறியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவம் ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. நாளைக்கு நீங்கள்தான் முதல்வராக வரப்போகிறீர்கள்…” எனப் பேசிக்கொண்டிருக்கும்போது மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசன், ஏதோ சொல்ல, பதற்றமடைந்த எம்.எல்.ஏ பரமசிவம், “ஐயய்யோ… வரலாற்றுப் பிழை செய்துவிட்டேன்.

நான் வீட்டுக்குப் போனதும் என் வாயை பினாயில் போட்டுக் கழுவிவிடுகிறேன். ஸ்டாலினால் முதல்வராக முடியாது” என்றார். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.

இதனையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள்’ என அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே, என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மேடையில் உளறியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.