சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்ட குருமூர்த்தி

0

தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாக காரணம்’ என்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்து கொண்டார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, ‘யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது.

வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது. நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் செளரி கூறியது போல், திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது’ என்றார்.

 

Comments are closed.