ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

ஆப்கானிஸ்தானின் ஹஸ்கா மினா மாவட்டம் நங்கர்ஹர் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் வழக்கம் போல் ஏராளமானோர் நேற்று தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.