உ.பி-யில் மீண்டும் பாலியல் வன்கொடுமை: காவல்துறையினர் புகாரை ஏற்காததால் சிறுமி தற்கொலை

0

உத்தர பிரதேசத்தில் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது தலித் சிறுமியின் புகாரை, காவல்துறைனர் ஏற்க மறுத்ததால் சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்சியாக அறங்கேறி வருகிறது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தர பிரதேசத்தில் தான் அதிகம் என தேசிய குற்றப்பதிவு ஆவணக்காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள மணிக்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது தலித் சிறுமியை கடந்த 8ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் கை, கால்களை கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகாரை போலிஸார் ஏற்க மறுத்ததால், மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமி தரப்பில் இருந்து யாரும் புகார் கொடுக்கவில்லை என காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து சமூக வலதளங்களில் வெளிவரவே, கிஷான் உபாத்யாய், ஆஷிஷ், சதீஷ் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், SC\ST வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply