அஸ்ஸாமில் CAA-க்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம்

0

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியதை அடுத்து அஸ்ஸாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் போரட்டத்தை நிறுத்திவைக்க அரசு கேட்டுக்கொண்டது. இதனால் போராட்டக்காரர்கள் தற்காலிமாக போராட்டத்தை நிறுத்தினர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட காரணாம் கொரோனா என்றும், இந்த சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

“கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. மேலும் பாஜக பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது. நாடு எதிர்கொண்டு வரும் சிக்கலை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய நேரமிது. இச்சட்டத்தை அமல்படுத்தி நாட்டின் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கக் கூடாது” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெ.பி.நட்டா கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன் கிழமை அஸ்ஸாமில் மாணவர்கள் நட்டாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹாட்டில் உள்ள துணை ஆணையர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பாஜக, ஆர்.எஸ்.எஸ், நரேந்திர மோடி ஆகியோருக்கு எதிராக கண்டன கேஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அஸ்ஸாமியின் அடையாளத்தை அழிக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அஸ்ஸாம் மாநில் பூர்வீக மக்களுக்கு சொந்தமானது. வெளியாட்களுக்கு அல்ல. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத வெளிநாட்டினரை அழைத்து வருவதற்கான முயற்சிதான் பாஜக அரசின் இந்த சட்டம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.