“மீண்டும் கோத்ரா சம்பவம் நடக்கும்”- பாஜக அமைச்சர் திமிர் பேச்சு!

0

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக பாஜக சுற்றுலா துறை அமைச்சர் சிடி.ரவி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

மங்களூருவில் நடந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரவி, ”கோத்ராவில் நடந்ததை தறபோது நினைவுக்கூர்ந்து வார்க்கவேண்டும். சிறுபான்மையின மக்கள் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைத்தனர். கோத்ரா சம்பவத்திற்குதுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை நினைவில் இல்லாவிட்டால் நினைவுக்குக் கொண்டுவர முயற்சிக்கவும்.” என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், பெரும்பான்மை மக்களின் பொறுமையை சோதித்தால் இன்னொரு கோத்ரா சம்பவம் நடக்ககும் எனவும் பாஜக சிடி.ரவி எச்சரித்துள்ளார்.

Comments are closed.