ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜக அரசு

0

மத்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா சமீபகாலமாகக கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது.

இத்தகைய இழப்பை காரணமாக வைத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை  ஒட்டு மொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஏர் இந்தியாவின் 76 சதவித பங்குகளை தனியாருக்கு அளிக்கவும், மீதமுள்ள 24 சதவித பங்குகளை தன்வசம் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

கடந்த 1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் இந்தியாவின் விமான சேவையை டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் ஜே.ஆர்.டி டாடா நடந்திவந்தார். சுதந்திரம அடைந்த பிறகு ஏர் இந்தியாவை அரசு தன்வசமாகிக் கொண்டது.

ஆனால், தற்போது அதே டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவை விற்க முடிவு எடுத்திருப்பதாகவும், ஏர் இந்தியா விற்பனைக்கு வருவதால், டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.