திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியாருக்கு வழங்க முடிவு

0

லக்னோ, அகமதாபாத், ஜெய்பூா், மங்களூரு, திருவனந்தபுரம், குவாஹடி ஆகிய நகரங்களின் விமான நிலையங்களை கடந்த பிப்ரவரி மாதம் தனியாருக்கு தாரை வார்த்து மத்திய பாஜக அரசு.

இந்நிலையில் திருச்சி, அமிர்தசரஸ், வாராணசி, புவனேஸ்வர், இந்தூா், ராய்பூா் ஆகிய 6 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கான முடிவு கடந்த செப்டம்பா் 5ஆம் தேதி நடைபெற்ற இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிா்வாகக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் முதல் கட்டமாக 6 விமான நிலையங்கள் தனியாா்மயமாக்கப்பட்டன. அந்த 6 விமான நிலையங்களின் நிா்வாகம் மற்றும் இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.