ரமலான் மாதம் முழுவதும் அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகம் மூடப்படும்!

0

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான அல்-அக்ஸா மஸ்ஜித்தின் அறிஞர்களின் குழு ஒரு முடிவை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரமலான் மாதம் முழுவதும் அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகம் மூடப்படும், அதேவேளை வழிபாட்டிற்கும் அனுமதியில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து ஜெரூசலம் இஸ்லாமிய வக்ஃப் நிர்வாகம்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் “இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த வலி மிகுந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.” முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்பு கருதி வீடுகளிலேயே தொழுதுக்கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐவேளை தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும் என்றும் மஸ்ஜித்தின் இமாம் மற்றும் பணியாளர்கள் அனுமதிப்படுவர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலானில் நடைபெறும் இரவு தொழுகைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிவாசலில் ஒன்று கூடுவது வழக்கம். இதனை முன்னிட்டு நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.