“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்!

0

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுருந்த  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அமர்த்தியா சென், “இந்த விவகாரம் பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்குறிய நிலப்பகுதி. காஷ்மீரில் இருக்கும் மக்கள் பிரநிதிகளையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிறை வைத்துவிட்டு உண்மையான நீதியை உங்களால் நிலைநாட்ட முடியாது. அம்மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களை நீங்கள் சிறையில் வைத்துள்ளீர்கள். ஜனநாயகத்தை வெற்றிகரமாக வைத்திருக்கும் காரணிகளை நீங்கள் நசுக்குகிறீர்கள்.” என்றார்.

“ஜனநாயக இல்லாமல் காஷ்மிரில் விவகாரத்தில் சுமூக தீர்வு இருக்க வாய்ப்பில்லை. காஷ்மிர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளில் பல்வேறு ஓட்டைகள் உள்ளது. ஒரு இந்தியனாக இந்த முடிவு எனக்குப் பெருமை அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.