பல கொரோனா நோயாளிகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கொரோனாவால் பலி

0
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் ஆம்புலன்ஸில் தங்கி கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை இறுதிச்சடங்கு செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்  கொரோனாவால் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் ஆம்புலன்சில் தங்கி நோயாளிகளின் இறுதிச்சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் டெல்லியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரிப்கான். இவர் 200க்கும் மேற்பட்ட இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவி செய்ததோடு, உறவினர் இல்லாத உடலுக்கு அவரே இறுதிச்சடங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கொரோனாவுக்கு சேவை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் அதே கொரோனா நோயால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சேவைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிந்றனர்.

Comments are closed.