இந்தியாவை இந்து – முஸ்லிம் என்று மோடி பிளவுப்படுத்துகிறார் -நோபல் அறிஞர் கருத்து

0

பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அறிஞரான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர். கடந்த 2001ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயை அரசு எடுத்துக்கொண்ட விதம் குறித்து தனியார் அமைப்பு நடத்திய இணையவழிக கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இந்தியாவை இந்து-முஸ்லீம் என மத அடிப்படையில் பிரதமர் மோடி பிளவுபடுத்தி வருவதாக கூறினார்.

“அனைவரையும் உள்ளடக்கி ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க முயற்சித்தால் பொருளாதார வளர்ச்சியை அடையும். பிரிவினை அரசியல், பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு எதிரானது. இந்திய நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை நிறுத்த மோடி முயச்சிக்கிறார். இவரது பிரிவினை அரசியல் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் எப்போதும் பலவீனப்படுத்தும்.

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கம் அதன் நோக்கத்தில் இருந்து தவறிவிட்டது. இந்திய அரசின் பொதுமுடக்கம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடித்தான் அதிகமானது” என ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இகவ்வாறு அரசியல் செய்தால் பொருளாதார பின்விளைவுகளை சமாளிக்க முடியாது ஆகையால் தொற்றுநோயைக கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மோடி அரசுக்கு அவர் தெரிவித்துள்ளார்..

Comments are closed.