இந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை

0

அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்க்கான ஆணையம் (USCIRF) நேற்று தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது.

இதில் இந்தியாவில் முஸ்லீம்கள் பாஜக அரசால் மிகவும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

  • தப்ரேஸ் அன்சாரி கொலையை சுட்டி காட்டி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பெயரில் கொலைகள் நடப்பது
  • டெல்லியில் CAA போராட்டத்திற்க்கு எதிராக திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டது
  • மாட்டின் பெயரால் 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது, இதில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், தலித்துகள் தாக்கப்ப்ட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கும் BJP, RSS-க்கும் உள்ள தொடர்பையும் சுட்டி காட்டியுள்ளது
  • NRC, CAA குடியுரிமை சட்டத்தின் மூலம் முஸ்லீம்களை அச்சுருத்தியது
  • கஷ்மீரின் நிலை
  • பாபர் மசூதி தீர்ப்பு

இது போன்ற முஸ்லிம்களை அடிமைகளாக்கி நாட்டைவிட்டு வெளியற்ற துடிக்கும் பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அந்த அமைப்பு அறிக்கையின் மூலம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும் அமித் ஷா, உ.பியின் யோகி, ஆர்.எஸ்.எஸ், பாஜக என அனைவரின் பெயர்களையும் சுட்டி காட்டி, இந்தியாவில் முஸ்லீம்களின் மத சுந்ததிரம் பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி இன்னும் பல சம்பவங்கள் இந்த அறிக்கையில் உள்ளது. நடந்த அனைத்து சம்பவங்களின் தொகுப்பாக இந்த அறிக்கை உள்ளது.

https://www.uscirf.gov/sites/default/files/USCIRF%202020%20Annual%20Report_42720_new_0.pdf

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த அறிக்கையை தொடர்ந்து,நேற்று அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கதை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையமான (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) பிப்ரவரி மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.